Sriman Narayaneeyam - Dasaka 67 - ராஸ க்ரீடை - 3 (ச்லோகம் 682)

Dasaka 67 - ராஸ க்ரீடை - 3

ஹா சூத ஹா சம்பக கர்ணிகார ஹா மல்லிகே மாலதி பாலவல்ய: கிம் வீக்ஷிதோ நோ ஹ்ருதயைக சோர: இத்யாதி தாஸ்த்வத் ப்ரவணா விலேபு: ஹா சூத ஹா சம்பக கர்ணிகார ஹா மல்லிகே மாலதி பாலவல்ய: கிம் வீக்ஷித: ந: ஹ்ருதய ஏக சோர: இதி ஆதி தா: த்வத் ப்ரவணா விலேபு: हा चूत हा चम्पक कर्णिकार हा मल्लिके मालति बालवल्ल्यः । किं वीक्षितो नो हृदयैकचोर इत्यादि तास्त्वत्प्रवणा विलेपुः

குருவாயூரப்பா! அவர்கள் வரும் வழியில் தென்பட்ட ஒவ்வொன்றையும் கண்டு, “மா மரமே! செண்பக மரமே! முருங்கை மரமே! மல்லிகைக் கொடியே! மாலதிக் கொடியே! தளிர் கொடியே! எங்கள் இதயத்தைக் கவர்ந்த கள்வன் எங்கு போனான்? நீங்கள் பார்த்தீர்களா?”, என்று கேட்டபடி உன்னை நினைத்து வருத்தம் உற்றனர்.