Sriman Narayaneeyam - Dasaka 67 - ராஸ க்ரீடை - 3 (ச்லோகம் 681)

Dasaka 67 - ராஸ க்ரீடை - 3

திரோஹிதேSத த்வயி ஜாத தாபா: ஸமம் ஸமேதா: கமலாயதாக்ஷ்ய: வநே வநே த்வாம் பரிமார்கயந்த்யோ விஷதாமாபுர் பகவந்நபாரம் திரோஹிதே அத த்வயி ஜாத தாபா: ஸமம் ஸமேதா: கமல ஆயத அக்ஷ்ய: வநே வநே த்வாம் பரிமார்கயந்த்ய: விஷதாம் ஆபு: பகவந் அபாரம் तिरोहितेऽथ त्वयि जाततापाः समं समेताः कमलायताक्ष्यः । वने वने त्वां परिमार्गयन्त्यो विषादमापुर्भगवन्नपारम्

பகவானே! குருவாயூரப்பா! நீ மறைந்து விட்டதும், தாமரை போன்ற கண்களை உடைய அந்தக் கோபிகைகள் துன்பம் அடைந்தனர். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு உன்னைத் தேடத் தொடங்கினர். உன்னைக் காணாமல் கவலை அடைந்தனர்.