Sriman Narayaneeyam - Dasaka 67 - ராஸ க்ரீடை - 3 (ச்லோகம் 680)
Dasaka 67 - ராஸ க்ரீடை - 3
ராதாபிதாம் தாவதஜாத கர்வாம் அதிப்ரியாம் கோப வதூம் முராரே பவாநுபாதாய கதோ விதூரம் தயா ஸஹ ஸ்வைர விஹார காரீ ராதா அபிதாம் தாவத் அஜாத கர்வாம் அதி ப்ரியாம் கோப வதூம் முராரே பவாந் உபாதாய கத: விதூரம் தயா ஸஹ ஸ்வைர விஹார காரீ राधाभिधां तावदजातगर्वामतिप्रियां गोपवधूं मुरारे । भवानुपादाय गतो विदूरं तया सह स्वैरविहारकारी
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! முராரியே! அந்த நேரத்தில் ராதை என்னும் கோபிகை மட்டும் எந்த விதமான கர்வமும் இன்றி, உன் மீது உண்மையான அன்புடன் இருந்தாள். (இதனை உணர்ந்த) நீ அவளை மட்டும் அழைத்துச் கொண்டு வெகுதூரம் சென்றாய். அங்கு அவளுடன் மட்டும் தனித்து விளையாடி மகிழ்ந்தாய் அல்லவா?