Sriman Narayaneeyam - Dasaka 67 - ராஸ க்ரீடை - 3 (ச்லோகம் 679)
Dasaka 67 - ராஸ க்ரீடை - 3
நிலீயதேSஸௌ மயி மய்யமாயம் ரமாபதிர் விச்வ மநோபிராம: இதி ஸ்ம ஸர்வா: கலிதாபிமாநா நிரீக்ஷ்ய கோவிந்த திரோஹிதோSபூ: நிலீயதே அஸௌ மயி மயி அமாயம் ரமா பதி: விச்வ மநோபிராம: இதி ஸ்ம ஸர்வா: கலித அபிமாநா: நிரீக்ஷ்ய கோவிந்த திரோஹித: அபூ: निलीयतेऽसौ मयि मय्यमायं रमापतिर्विश्वमनोभिरामः । इति स्म सर्वाः कलिताभिमाना निरीक्ष्य गोविन्द तिरोहितोऽभूः
குருவாயூரப்பா! அந்தக் கோபிகைகள் தங்கள் மனதில், “உலகில் சிறந்த அழகு உடையவனும், மஹாலக்ஷ்மியின் கணவனும் ஆகிய இவன் என் மீது அதிகம் அன்பு வைத்துள்ளான்”, என்ற ஒவ்வொருவரும் நினைத்தனர். இதனால் அவர்கள் கர்வம் மிகுந்தது. இதனை நீக்க எண்ணியவனாக நீ திடீரென மறைந்து விட்டாய்.