Sriman Narayaneeyam - Dasaka 66 - ராஸ க்ரீடை - 2 (ச்லோகம் 675)
Dasaka 66 - ராஸ க்ரீடை - 2
கந்தலித கர்ம லேசம் குந்த ம்ருது ஸ்மேர வக்த்ர பாதோஜம் நந்தஸுத த்வாம் த்ரி ஜகத் ஸுந்தரம் உபகூஹ்ய நந்திதா பாலா: கந்தலித கர்ம லேசம் குந்த ம்ருது ஸ்மேர வக்த்ர பாதோஜம் நந்தஸுத த்வாம் த்ரி ஜகத் ஸுந்தரம் உபகூஹ்ய நந்திதா பாலா: कन्दलितधर्मलेशं कुन्दमृदुस्मेरवक्त्रपाथोजम् । नन्दसुत त्वां त्रिजगत्सुन्दरमुपगूह्य नन्दिता बालाः
நந்தகோபரின் மகனே! குருவாயூரப்பா! உனது உடலிலும் முகத்திலும் வேர்வைத் துளிகள் மொட்டுகளாக இருந்தன. முகமானது தாமரை போன்று அழகாக மலர்ந்து இருந்தது. நீ மூன்று உலகங்களிலும் உள்ளவர்களில் மிகவும் அழகனாகத் தோன்றினாய். இப்படிப்பட்ட உன்னை கோபிகைகள் இறுக்கமாகத் தழுவிக் கொண்டு பரமானந்தம் அடைந்தனர்.