Sriman Narayaneeyam - Dasaka 66 - ராஸ க்ரீடை - 2 (ச்லோகம் 674)

Dasaka 66 - ராஸ க்ரீடை - 2

வாஸோ ஹரண திநே யத் வாஸோ ஹரணம் ப்ரதிச்ருதம் தாஸாம் ததபி விபோ ரஸ விவச ஸ்வ அந்தாநாம் காந்த ஸுப்ருவாமததா: வாஸோ ஹரண திநே யத் வாஸோ ஹரணம் ப்ரதிச்ருதம் தாஸாம் தத் அபி விபோ ரஸ விவச ஸ்வ அந்தாநாம் காந்த ஸுப்ருவாம் அததா: वासोहरणदिने यद्वासोहरणं प्रतिश्रुतं तासाम् । तदपि विभो रसविवशस्वान्तानां कान्तसुभ्रुवामदधाः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! அழகிய புருவங்களை உடைய அந்தக் கோபிகைகளிடம், முன்பு ஒரு சமயம் அவர்கள் நீராடியபோது, அவர்கள் ஆடையை நீ கவர்ந்தபோது, அவர்களுக்கு ஒரு வாக்களித்தாய். அதனை நிறைவேற்றும் வண்ணமாக இப்போது அவர்கள் ஆடைகளை நீ களைந்தாய்.