Sriman Narayaneeyam - Dasaka 66 - ராஸ க்ரீடை - 2 (ச்லோகம் 671)

Dasaka 66 - ராஸ க்ரீடை - 2

தாஸாம் ருதிதைர்லபிதை: கருணா ஆகுலா மாநஸோ முராரே த்வம் தாபிஸ்ஸமம் ப்ரவ்ருத்தோ யமுநா புளிநேஷு காமமபிரந்தும் தாஸாம் ருதிதை: லபிதை: கருணா ஆகுலா மாநஸ: முராரே த்வம் தாபி: ஸமம் ப்ரவ்ருத்த: யமுநா புளிநேஷு காமம் அபிரந்தும் तासां रुदितैर्लपितैः करुणाकुलमानसो मुरारे त्वम् । ताभिः समं प्रवृत्तो यमुनापुळिनेषु काममभिरन्तुम्

குருவாயூரப்பா! முரன் என்னும் அசுரனை அழித்த முராரியே! இப்படியாக அழுதும் புலம்பியும் நின்ற அவர்களைக் கண்டதும் உனது மனம் இரங்கியது. உடனே அவர்களுடன் யமுனையின் கரையில் உள்ள மணலில் விளையாடச் தொடங்கினாய். அல்லவா?