Sriman Narayaneeyam - Dasaka 66 - ராஸ க்ரீடை - 2 (ச்லோகம் 670)

Dasaka 66 - ராஸ க்ரீடை - 2

ஆகர்ண்ய தே ப்ரதீபாம் வாணீமேணீ த்ருச: பரம் தீநா: மா மா கருணா ஸிந்தோ பரித்யஜேத் அதி சிரம் விலேபுஸ்தா: ஆகர்ண்ய தே ப்ரதீபாம் வாணீம் ஏணீ த்ருச: பரம் தீநா: மா மா கருணா ஸிந்தோ பரித்யஜேத் அதி சிரம் விலேபு: தா: आकर्ण्य ते प्रतीपां वाणीमेणीदृशः परं दीनाः । मा मा करुणासिन्धो परित्यजेत्यतिचिरं विलेपुस्ताः

குருவாயூரப்பா! உன்னுடைய இந்த முரணான அறிவுரைகளை கேட்ட மானின் விழிகள் போன்று அழகிய கண்கள் உடைய அந்த கோபிகைகள், “கருணாமூர்த்தியே! எங்களைக் கைவிடாதே”, என்று கெஞ்சினர்.