Sriman Narayaneeyam - Dasaka 66 - ராஸ க்ரீடை - 2 (ச்லோகம் 669)

Dasaka 66 - ராஸ க்ரீடை - 2

ககந கதம் முநி நிவஹம் ச்ராவயிதும் ஜகித குல வதூ தர்மம் தர்ம்யம் கலு தே வசநம் கர்ம து நோ நிர்மலஸ்ய விச்வாஸ்யம் ககந கதம் முநி நிவஹம் ச்ராவயிதும் ஜகித குல வதூ தர்மம் தர்ம்யம் கலு தே வசநம் கர்ம து நோ நிர்மலஸ்ய விச்வாஸ்யம் गगनगतं मुनिनिवहं श्रावयितुं जगिथ कुलवधूधर्मम् । धर्म्यं खलु ते वचनं कर्म तु नो निर्मलस्य विश्वास्यम्

குருவாயூரப்பா! ஆகாயத்தில் ஸஞ்சரிக்கும் முனிவர்களின் காதுகளில் விழும்படியாக, நீ கோபிகைகளிடம் உயர்ந்த குலப் பெண்களின் தர்மங்களைக் கூறினாய். இப்படி தர்மங்களை உரைத்த உனது சொற்களை எடுத்து நடக்க வேண்டுமே அல்லாது, குற்றமில்லாத உனது செயல்களை அல்ல.