Sriman Narayaneeyam - Dasaka 65 - ராஸ க்ரீடை - 1 (ச்லோகம் 667)
Dasaka 65 - ராஸ க்ரீடை - 1
அப்யாகதாபிரபிதோ வ்ரஜ ஸுந்தரீபி: முக்த ஸ்மிதார்த்ர வதந: கருணாவலோகீ நிஸ்ஸீம காந்தி ஜலதிஸ்த்வமவேக்ஷ்யமாணோ விச்வைக ஹ்ருத்ய ஹர மே பவநேச ரோகாந் அப்யாகதாபி: அபித: வ்ரஜ ஸுந்தரீபி: முக்த ஸ்மித ஆர்த்ர வதந: கருணா அவலோகீ நிஸ்ஸீம காந்தி ஜலதி: த்வம் அவேக்ஷ்யமாண: விச்வ ஏக ஹ்ருத்ய ஹரமே பவநேச ரோகாந் अभ्यागताभिरभितो व्रजसुन्दरीभि - र्मुग्धस्मितार्द्रवदनः करुणावलोकी । निस्सीमकान्तिजलधिस्त्वमवेक्ष्यमाणो विश्वैकहृद्य हर मे परमेश रोगान्
உலகின் அனைவருடைய உள்ளத்தில் இருக்கும் பரம்பொருளே! குருவாயூரப்பா! உன்னை நாடி வந்த கோபிகைகள் உன்னைச் சுற்றி நிற்பதால் இனிமையான புன்னகை உடையவனாகவும், கருணை ததும்பும் முகம் உள்ளவனாகவும், ஒளிவீசும் முகம் கொண்டவனாகவும் உன்னை அவர்கள் கண்டனர். இப்படிப்பட்ட நீ எனது பிணிகளை நீக்க வேண்டும்.***