Sriman Narayaneeyam - Dasaka 65 - ராஸ க்ரீடை - 1 (ச்லோகம் 666)

Dasaka 65 - ராஸ க்ரீடை - 1

ஜாராத்மநா ந பரமாத்மதயா ஸ்மரந்த்யோ நார்யோ கதா: பரமஹம்ஸ கதிம் க்ஷணேந தம் த்வாம் ப்ரகாச பரமாத்ம தநும் கதஞ்சித் சித்தே வஹந்நம்ருதமச்ரமமச்நுவீய ஜாராத்மநா ந பரமாத்மதயா ஸ்மரந்த்ய: நார்ய: கதா: பரமஹம்ஸ கதிம் க்ஷணேந தம் த்வாம் ப்ரகாச பரமாத்ம தநும் கதஞ்சித் சித்தே வஹந் அம்ருதம் அச்ரமம் அச்நுவீய जारात्मना न परमात्मतया स्मरन्त्यो नार्यो गताः परमहंसगतिं क्षणेन । तं त्वां प्रकाशपरमात्मतनुं कथञ्चिच्चित्ते वहन्नमृतमश्रममश्नुवीय

குருவாயூரப்பா! அந்த கோபாஸ்திரீகள் உன்னை பரம்பொருள் என்றே நினைக்கவில்லை. தங்கள் கள்ளக் காதலனாக மட்டுமே நினைத்தனர். இதனால் அவர்கள் ஒரு நொடியில் பரமஹம்ஸர்களான ஸந்யாஸிகள் அடையும் மோக்ஷ வழி பெற்றனர். கண்கூடாகக் காட்சி அளிக்கும் உனது ஸ்வரூபத்தை நான் (அவர்கள் போல்) என் மனதில் த்யானித்து, நிலை நிறுத்தி, எந்தவித சிக்கலும் இன்றி மோக்ஷம் பெறுவேன்.