Sriman Narayaneeyam - Dasaka 65 - ராஸ க்ரீடை - 1 (ச்லோகம் 665)

Dasaka 65 - ராஸ க்ரீடை - 1

காச்சித் க்ருஹாத் கில நிரேதுமபாரயந்த்ய: த்வாமேவ தேவ ஹ்ருதயே ஸுத்ருடம் விபாவ்ய தேஹம் விதூய பரசித் ஸுகரூபமேகம் த்வாமாவிசந் பரமிமா நநு தந்ய தந்யா: காச்சித் க்ருஹாத் கில நிரேதும் அபாரயந்த்ய: த்வாம் ஏவ தேவ ஹ்ருதயே ஸுத்ருடம் விபாவ்ய தேஹம் விதூய பரசித் ஸுக ரூபம் ஏகம் த்வாம் ஆவிசந் பரம் இமா: நநு தந்ய தந்யா: काश्चित् गृहात् किल निरेतुमपारयन्त्य - स्त्वामेव देव हृदये सुदृढं विभाव्य । देहं विधूय परचित्सुखरूपमेकं त्वामाविशन् परमिमा ननु धन्यधन्याः

தேவனே! குருவாயூரப்பா! சிலர் தங்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியவில்லை. அவர்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே உன்னை ஆழமான அன்புடன் தங்கள் இதயத்தில் த்யானம் செய்தனர். இப்படியாக அவர்கள் தங்கள் உடலை விட்டவர்களாக, உனது உடலில் இரண்டறக் கலந்தார்கள் அல்லவா? இவர்கள் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள் அன்றோ!