Sriman Narayaneeyam - Dasaka 65 - ராஸ க்ரீடை - 1 (ச்லோகம் 664)

Dasaka 65 - ராஸ க்ரீடை - 1

காசித் குசே புநரஸஜ்ஜித கஞ்சுலீகா வ்யாமோஹித: பரவதூபிரலக்ஷ்யமாணா த்வாமாயயௌ நிருபம ப்ரணயாதிபார ராஜ்யாபிஷேக விதயே கலசீதரேவ காசித் குசே புந: அஸஜ்ஜித கஞ்சுலீகா வ்யாமோஹித: பரவதூபி: அலக்ஷ்யமாணா த்வாம் ஆயயௌ நிருபம ப்ரணய அதிபார ராஜ்ய அபிஷேக விதயே கலசீதரா இவ काचित् कुचे पुनरसज्जितकञ्चुलीका व्यामोहतः परवधूभिरलक्ष्यमाणा । त्वामाययौ निरुपमप्रणयातिभार - राज्याभिषेकविधये कलशीधरेव

குருவாயூரப்பா! அவர்களில் ஒரு பெண் அவசரத்தில் தனது மேல் ஆடையை அணிய மறந்து விட்டாள். மற்றவர்களுக்கு அவள் இப்படி வந்தது தெரியவில்லை. அன்பு என்னும் உனது அந்த அரசாங்கத்தில் பட்டாபிஷேகம் செய்ய புனித நீர் கொண்டு வருவது போல் அவள் இரண்டு கலசங்கள் ஏந்தியவளாக வந்தாள் அல்லவா?