Sriman Narayaneeyam - Dasaka 65 - ராஸ க்ரீடை - 1 (ச்லோகம் 662)

Dasaka 65 - ராஸ க்ரீடை - 1

காச்சிந்நிஜாங்க பரிபூஷணமாத தாநா வேணு ப்ரணாதமுபகர்ண்ய க்ருதார்த்த பூஷா: த்வாமாகதா நநு ததைவ விபூஷிதாப்ய: தா ஏவ ஸம்ருருசிரே தவ லோசநாய காச்சித் நிஜ அங்க பரிபூஷணம் ஆததாநா: வேணு ப்ரணாதம் உபகர்ண்ய க்ருத அர்த்த பூஷா: த்வாம் ஆகதா: நநு ததா ஏவ விபூஷிதாப்ய: தா ஏவ ஸம்ருருசிரே தவ லோசநாய काश्चिन्निजाङ्गपरिभूषणमादधाना वेणुप्रणादमुपकर्ण्य कृतार्धभूषाः । त्वामागता ननु तथैव विभूषिताभ्यस्ता एव संरुरुचिरे तव लोचनाय

குருவாயூரப்பா! மேலும் சில கோபிகைகள் தங்கள் உடலில் நகைகளை அணிந்து கொண்டிருக்கும் போது உனது குழலோசை கேட்டது. அந்த மகிழ்வில் பாதி செய்த அலங்காரத்துடன் அப்படியே வந்தனர். முழுவதுமாக அலங்காரம் செய்து கொண்டிருந்தவர்களை விட இவர்கள் உன்னை அதிகம் கவர்ந்தனர் அல்லவா?