Sriman Narayaneeyam - Dasaka 65 - ராஸ க்ரீடை - 1 (ச்லோகம் 661)
Dasaka 65 - ராஸ க்ரீடை - 1
தா கேஹ க்ருத்ய நிரதாஸ்தநய ப்ரஸக்தா: காந்தோபஸேவந பராச்ச ஸரோருஹாக்ஷ்ய: ஸர்வம் விஸ்ருஜ்ய முரளீ ரவ மோஹிதாஸ்தே காந்தார தேசமயி காந்த தநோ ஸமேதா: தா கேஹ க்ருத்ய நிரதா: தநய ப்ரஸக்தா: காந்த உபஸேவந பரா: ச ஸரோருஹ அக்ஷ்ய: ஸர்வம் விஸ்ருஜ்ய முரளீ ரவ மோஹிதா: தே காந்தார தேசம் அயி காந்த தநோ ஸமேதா: ता गेहकृत्यनिरतास्तनयप्रसक्ताः कान्तोपसेवनपराश्च सरोरुहाक्ष्यः । सर्वं विसृज्य मुरलीरवमोहितास्ते कान्तारदेशमयि कान्ततनो समेताः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அழகிய மனம் கவரும் திருமேனி உடையவனே! அந்த நேரத்தில் கோபிகைகளில் ஒரு சிலர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர்; சிலர் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர்; சிலர் கணவன்மார்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தனர். தாமரை போன்ற அழகான கண்கள் உடைய அந்தப் பெண்கள், உன்னுடைய இனிமையான குழல் ஓசை கேட்டவுடன், நீ உள்ள கானகத்திற்கு, வீட்டு வேலைகளை அப்படியே விட்டு விட்டு வந்தனர்.