Sriman Narayaneeyam - Dasaka 65 - ராஸ க்ரீடை - 1 (ச்லோகம் 660)
Dasaka 65 - ராஸ க்ரீடை - 1
ஸம்மூர்ச்சநாபிருதித ஸ்வர மண்டலாபி: ஸம்மூர்சயந்தமகிலம் புவநாந்தாரளம் த்வத் வேணு நாதமுபகர்ண்ய விபோ தருண்ய: தத் தாத்ருசம் கமபி சித்த விமோஹமாபு: ஸம்மூர்ச்சநாபி: உதித ஸ்வர மண்டலாபி: ஸம்மூர்சயந்தம் அகிலம் புவந அந்தாரளம் த்வத் வேணு நாதம் உபகர்ண்ய விபோ தருண்ய: தத் தாத்ருசம் கம் அபி சித்த விமோஹம் ஆபு: सम्मूर्छनाभिरुदितस्वरमण्डलाभिः सम्मूर्छयन्तमखिलं भुवनान्तरालम् । त्वद्वेणुनादमुपकर्ण्य विभो तरुण्य - स्तत्तादृशं कमपि चित्तविमोहमापुः
எங்கும் நிறைந்தவனே! குருவாயூரப்பா! உனது குழலில் இருந்து மிகவும் இனிமையான இசை எழுந்தது. அது ஏழு ஸ்வரங்களை இனிதே உடையதாகவும், ஏற்றத்தாழ்வுகள் இன்றி நேர்த்தியானதாகவும், உலகங்கள் அனைத்தையும் மயக்குவதாகவும் இருந்தது. உனது அந்த நாதத்தைக் கேட்ட கோபிகைகள் உவமை எதுவும் கூற முடியாத அளவிற்கு மனம் மயங்கி இன்பம் அடைந்தனர்.