Sriman Narayaneeyam - Dasaka 65 - ராஸ க்ரீடை - 1 (ச்லோகம் 659)
Dasaka 65 - ராஸ க்ரீடை - 1
கோபீஜநாய கதிதம் நியமாவஸாநே மாரோத்ஸவம் த்வமத ஸாதயிதும் ப்ரவ்ருத்த: ஸாந்த்ரேண சாந்த்ர மஹஸா சிசிரீக்ருதாசே ப்ராபூரயோ முரளிகாம் யமுநா வநாந்தே கோபீஜநாய கதிதம் நியம அவஸாநே மார உத்ஸவம் த்வம் அத ஸாதயிதும் ப்ரவ்ருத்த: ஸாந்த்ரேண சாந்த்ர மஹஸா சிசிரீ க்ருத ஆசே ப்ராபூரய: முரளிகாம் யமுநா வந அந்தே गोपीजनाय कथितं नियमावसाने मारोत्सवं त्वमथ साधयितुं प्रवृत्तः । सान्द्रेण चान्द्रमहसा शिशिरीकृताशे प्रापूरयो मुरलिकां यमुनावनान्ते
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ முன்பு ஒரு சமயம் கோபிகைகள் பார்வதியைக் குறித்த விரதத்தின் முடிவில் மன்மத உத்ஸவமான ராஸக்ரீடை நடத்துவதாக கோபிகைகளுக்கு வாக்களித்தாய் (தசகம் 60: ச்லோகம் 9). அதனை நிறைவேற்றும் பொருட்டு நீ நிலவின் ஒளியால் குளிர்ந்து இருந்த யமுனை நதியின் கரையில் உனது புல்லாங்குழலை இனிமையாக ஊதினாய்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-29-1 முதல் x-29-16 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.