Sriman Narayaneeyam - Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம் (ச்லோகம் 658)

Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம்

கர பதரவதேவம் தேவ குத்ராவதாரே நிஜ பதமநவாப்யம் தர்சிதம் பக்தி பாஜாம் ததிஹ பசுப ரூபீ த்வம் ஹி ஸாக்ஷாத் பராத்மா பவந புர நிவாஸிந் பாஹி மாமாமயேப்ய: கர பதர வத் ஏவம் தேவ குத்ர அவதாரே நிஜ பதம் அநவாப்யம் தர்சிதம் பக்தி பாஜாம் தத் இஹ பசுப ரூபீ த்வம் ஹி ஸாக்ஷாத் பர ஆத்மா பவந புர நிவாஸிந் பாஹி மாம் ஆமயேப்ய: करबदरवदेवं देव कुत्रावतारे निजपदमनवाप्यं दर्शितं भक्तिभाजाम् । तदिह पशुपरूपी त्वं हि साक्षात् परात्मा पवनपुरनिवासिन् पाहि मामामयेभ्यः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னுடைய இருப்பிடமான ஸ்ரீவைகுண்டத்தை வேறு எந்த அவதாரத்திலும் இவ்விதம் உள்ளங்கை நெல்லிக்கனியாக உனது அடியார்களுக்கு நீ காண்பித்தது கிடையாது. இடைச்சிறுவனாக வந்த நீயல்லவா, இப்படிக் காண்பித்தாய்? இப்படிப்பட்ட நீ சாக்ஷாத் அந்த பரம்பொருளே ஆவாய். என்னுடைய பிணிகளை நீக்குவாயாக!***