Sriman Narayaneeyam - Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம் (ச்லோகம் 655)
Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம்
ஸஸம்ப்ரமம் தேந ஜலாதிபேந ப்ரபூஜிதஸ்த்வம் ப்ரதிக்ருஹ்ய தாதம் உபாகதஸ்தத் க்ஷணமாத்ம கேஹம் பிதாSவதத் தச்சரிதம் நிஜேப்ய: ஸஸம்ப்ரமம் தேந ஜல அதிபேந ப்ரபூஜித: த்வம் ப்ரதிக்ருஹ்ய தாதம் உபாகத: தத் க்ஷணம் ஆத்ம கேஹம் பிதா அவதத் தத் சரிதம் நிஜேப்ய: ससम्भ्रमं तेन जलाधिपेन प्रपूजितस्त्वं प्रतिगृह्य तातम् । उपागतस्तत्क्षणमात्मगेहं पिताऽवदत्तच्चरितं निजेभ्यः
குருவாயூரப்பா! உன்னுடைய வருகையைக் கண்டு மகிழ்ந்த வருணதேவன், மிகுந்த ஆர்வத்துடன் உன்னை வரவேற்றுத் துதித்தான். நீ உடனே உனது தந்தையை அழைத்துக் கொண்டு உன்னுடைய வீட்டிற்குத் திரும்பினாய். உனது தந்தை இந்த நிகழ்ச்சியை தனது உறவினர்கள் அனைவருக்கும் கூறினார் அல்லவா?