Sriman Narayaneeyam - Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம் (ச்லோகம் 654)

Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம்

கதாசிதந்தர் யமுநம் ப்ரபாதே ஸ்நாயந் பிதா வாருண பூருஷேண நீதஸ்தமாநேதுமகா: புரீம் த்வாம் தாம் வாருணீம் காரண மர்த்ய ரூப: கதாசித் அந்தர் யமுநம் ப்ரபாதே ஸ்நாயந் பிதா வாருண பூருஷேண நீத: தம் ஆநேதும் அகா: புரீம் த்வாம் தாம் வாருணீம் காரண மர்த்ய ரூப: कदाचिदन्तर्यमुनं प्रभाते स्नायन् पिता वारुणपूरुषेण । नीतस्तमानेतुमगाः पुरीं त्वं तां वारुणीं कारणमर्त्यरूपः

குருவாயூரப்பா! ஒருநாள் விடியற்காலைப் பொழுதிற்கு முன்பு உனது தந்தை நந்தகோபர் யமுனையில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது வருணனின் தூதன் ஒருவன் அவனை வருண லோகத்திற்கு இழுத்து சென்று விட்டான். அப்போது மானுட உருவம் உடைய நீ உனது தந்தையை அழைத்து வர வருண லோகம் சென்றாய்.