Sriman Narayaneeyam - Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம் (ச்லோகம் 652)
Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம்
ஸ்நேஹ ஸ்நுநைஸ்த்வாம் ஸுரபி: பயோபி: கோவிந்த நாமாங்கிதமப்யஷிஞ்சத் ஐராவதோபாஹ்ருத திவ்ய கங்கா பாதோபிரிந்த்ரோSபி ச ஜாத ஹர்ஷ: ஸ்நேஹ ஸ்நுநை: த்வாம் ஸுரபி: பயோபி: கோவிந்த நாம அங்கிதம் அப்யஷிஞ்சத் ஐராவத உபாஹ்ருத திவ்ய கங்கா பாதோபி: இந்த்ர: அபி ச ஜாத ஹர்ஷ: स्नेहस्तुनैस्त्वां सुरभिः पयोभिर्गोविन्दनामाङ्कितमभ्यषिञ्चत् । ऐरावतोपाहृतदिव्यगङ्गापाथोभिरिन्द्रोऽपि च जातहर्षः
குருவாயூரப்பா! கோவிந்தன் என்ற திருநாமம் கொண்ட உனக்கு, உன் மீது கொண்ட அன்பின் மிகுதியால், அந்தக் காமதேனு பால் கொண்டு திருமஞ்சனம் செய்தது. இதனைக் கண்ட இந்திரனும் மனம் மகிழ்ந்தான். தனது ஐராவதத்தின் மீது கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் நீரினால் உனக்குத் திருமஞ்சனம் செய்தான்.