Sriman Narayaneeyam - Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம் (ச்லோகம் 651)

Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம்

ததோSவமாநோதித தத்வ போத: ஸுராதிராஜ: ஸஹ திவ்ய கவ்யா உபேத்ய துஷ்டாவ ஸ நஷ்ட கர்வ: ஸ்ப்ருஷ்ட்வா பதாப்ஜம் மணி மௌளிநா தே தத: அவமாந உதித தத்வ போத: ஸுராதிராஜ: ஸஹ திவ்ய கவ்யா உபேத்ய துஷ்டாவ ஸ நஷ்ட கர்வ: ஸ்ப்ருஷ்ட்வா பத அப்ஜம் மணி மௌளிநா தே ततोऽवमानोदिततत्त्वबोधः सुराधिराजः सह दिव्यगव्या । उपेत्य तुष्टाव स नष्टगर्वः स्पृष्ट्वा पदाब्जं मणिमौलिना ते

குருவாயூரப்பா! உன்னால் இப்படி ஓர் அவமானம் அடைந்த இந்திரன், உன்னைப் பற்றி அறிந்து கொண்டான். தனது கர்வத்தை விட்டான். காமதேனுவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு உன்னிடம் வந்தான். உனது தாமரை போன்ற சிவந்த அழகிய திருப்பாதங்களில் தனது க்ரீடத்தைத் தாழ்த்தி வணங்கினான்.