Sriman Narayaneeyam - Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம் (ச்லோகம் 650)

Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம்

கர்கோதிதோ நிர்கதிதோ நிஜாய வர்க்காய தாதேந தவ ப்ரபாவ: பூர்வாதிகஸ்த்வப்யநுராக ஏஷாம் ஐதிஷ்ட தாவத் பஹுமாநபார: கர்க உதித: நிர்கதித: நிஜாய வர்க்காய தாதேந தவ ப்ரபாவ: பூர்வ அதிக: து அபி அநுராக ஏஷாம் ஐதிஷ்ட தாவத் பஹுமாநபார: गर्गोदितो निर्गदितो निजाय वर्गाय तातेन तव प्रभावः । पूर्वाधिक्स्त्वय्यनुराग एषामैधिष्ट तावत् बहुमानभारः

குருவாயூரப்பா! உடனே அவர்களிடம் உனது தந்தை, தன்னிடம் முன்பு ஒரு நாள் கர்க்கர் என்ற முனிவர் கூறிய உனது பெருமைகளை எடுத்து உரைத்தார். அந்த நிமிடத்தில் இருந்து ஆயர்களுக்கு உன் மீது இருந்த அன்பும் பக்தியும் பல மடங்காக மாறியது.