Sriman Narayaneeyam - Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம் (ச்லோகம் 649)
Dasaka 64 - கோவிந்த பட்டாபிஷேகம்
ஆலோக்ய சைலோத்தரணாதி ரூபம் ப்ரபாவமுச்சைஸ்தவ கோப லோகா: விச்வேச்வரம் த்வாமபிமத்ய விச்வே நந்தம் பவஜ்ஜாதகமந்வப்ருச்சந் ஆலோக்ய சைல உத்தரண ஆதி ரூபம் ப்ரபாவம் உச்சை: தவ கோப லோகா: விச்வ ஈச்வரம் த்வாம் அபிமத்ய விச்வே நந்தம் பவந் ஜாதகம் அந்வப்ருச்சந் आलोक्य शैलोद्धरणादिरूपं प्रभावमुच्चैस्तव गोपलोकाः । विश्वेश्वरं त्वामभिमत्य विश्वे नन्दः भवज्जातकमन्वपृच्छन्
குருவாயூரப்பா! வ்ருந்தாவனத்தில் இருந்த அனைத்து கோபர்களும் நீ மலையைத் தூக்கி நின்றது. மேலும் பல செயல்களை நிகழ்த்தியது வியப்பை அளித்தன. அவர்கள் நீ சாதாரண மனிதன் அல்லன், அந்த ஸர்வேஸ்வரன் என்றே நினைத்தனர். ஆகவே அந்த சந்தேகம் நீங்குவதற்காக உனது தந்தையிடம் உனது ஜாதகத்தைப் பற்றிக் கேட்டனர்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x, அத்யாயங்கள் 26, 27 மற்றும் 28 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.