Sriman Narayaneeyam - Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல் (ச்லோகம் 647)
Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல்
சமமுபேயுஷி வர்ஷபரே ததா பசுப தேநு குலே ச விநிர்கதே புவி விபோ ஸமுபாஹித பூதர: ப்ரமுதிதை: பசுபை: பரிரேபிஷே சமம் உபேயுஷி வர்ஷபரே ததா பசுப தேநு குலே ச விநிர்கதே புவி விபோ ஸமுபாஹித பூதர: ப்ரமுதிதை: பசுபை: பரிரேபிஷே शममुपेयुषि वर्षभरे तदा पशुपधेनुकुले च विनिर्गते । भुवि विभो समुपाहितभूधरः प्रमुदितैः पशुपैः परिरेभिषे
குருவாயூரப்பா! எங்கும் நிறைந்தவனே! அந்த அடைமழை ஓய்ந்தது. ஆயர்களும் பசுக்களும் அந்த மலைக் குடையை விட்டு, வெளியில் வந்தனர். நீயும் அந்த மலையை அதன் இடத்தில் மெதுவாக இறக்கி வைத்தாய். கோபர்கள் அனைவரும் மிகுந்த ஆனந்தத்துடன் உன்னைக் கட்டி அணைத்தனர் அல்லவா?