Sriman Narayaneeyam - Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல் (ச்லோகம் 646)

Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல்

அசலதி த்வயி தேவ பதாத் பதம் கலித ஸர்வ ஜலே ச கநோத்கரே அபஹ்ருதே மருதா மருதாம் பதி: த்வதபி சங்கிததீ: ஸமுபாத்ரவத் அசலதி த்வயி தேவ பதாத் பதம் கலித ஸர்வ ஜலே ச கந உத்கரே அபஹ்ருதே மருதா மருதாம் பதி: த்வத் அபி சங்கித தீ: ஸமுபாத்ரவத் अचलति त्वयि देव पदात्पदं गलितसर्वजले च घनोत्करे । अपहृते मरुता मरुतां पतिस्त्वदभिशङ्कितधीः समुपाद्रवत्

தேவனே! குருவாயூரப்பா! நீ எங்கு நின்றாயோ அந்த இடத்தில் இருந்து சிறிதும் நகரவில்லை. மழையைக் கொட்டிய மேகங்கள் நீர் தீர்ந்து விட்ட நிலையில், காற்றின் மூலம் தள்ளிச் செல்லப்பட்டன. தேவர்களின் தலைவனான இந்திரன் உன்னைக் கண்டு பயந்தான். அங்கிருந்து மறைந்து ஓடிவிட்டான்.