Sriman Narayaneeyam - Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல் (ச்லோகம் 645)

Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல்

அஹஹ தார்ஷ்ட்யமமுஷ்ய வடோர்கிரிம் வ்யதித பாஹுரஸாவவரோபயேத் இதி ஹரிஸ்த்வயி பக்த விகர்ஹணோ திவஸ ஸப்தகமுக்ரமவர்ஷயத் அஹஹ தார்ஷ்ட்யம் அமுஷ்ய வடோ: கிரிம் வ்யதித பாஹு: அஸௌ அவரோபயேத் இதி ஹரி: த்வயி பக்த விகர்ஹண: திவஸ ஸப்தகம் உக்ரம் அவர்ஷயத் अहह धार्ष्ट्यममुष्य वटोर्गिरिं व्यथितबाहुरसाववरोपयेत् । इति हरिस्त्वयि बद्धविगर्हणो दिवससप्तकमुग्रमवर्षयत्

ஸ்ரீஹரியே! குருவாயூரப்பா! நீ இப்படி நிற்பதைக் கண்ட இந்திரன் மிகவும் கோபத்துடன், “இந்தச் சிறுவனுக்கு உள்ள துணிவுதான் என்னே! என்ன கர்வம்? தனது கைகள் சோர்ந்து போனவுடன் அந்த மலையை கீழே இறக்கி விடுவான்”, என்று எண்ணினான். அத்துடன், மழையை மேலும் அதிகரித்து தொடர்ந்து ஏழு நாட்கள் பொழியும்படிச் செய்தான்.