Sriman Narayaneeyam - Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல் (ச்லோகம் 643)

Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல்

பவதி வித்ருத சைலே பாலிகாபிர் வயஸ்யை: அபி விஹித விலாஸம் கேலி லாபாதி லோலே ஸவித மிலித தேநூரேக ஹஸ்தேந கண்டூயதி ஸதி பசு பாலாஸ்தோஷமைக்ஷந்த ஸர்வே பவதி வித்ருத சைலே பாலிகாபி: வயஸ்யை: அபி விஹித விலாஸம் கேலி லாப ஆதி லோலே ஸவித மிலித தேநூ: ஏக ஹஸ்தேந கண்டூயதி ஸதி பசு பாலா: தோஷம் ஐக்ஷந்த ஸர்வே भवति विधृतशैले बालिकाभिर्वयस्यैरपि विहितविलासं केलिलापादिलोले । सविधमिलितधेनूरेकहस्तेन कण्डूयति सति पशुपालास्तोषमैषन्त सर्वे

குருவாயூரப்பா! நீ உனது ஒரு கையில் அந்த மலையை வைத்திருந்தாய். அருகில் நின்றிருந்த கோபிகைகளுடனும், உனது நண்பர்களுடனும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாய். உனது மற்றொரு கையால் அருகில் நின்று கொண்டிருந்த பசுக்களை தடவிக் கொண்டிருந்தாய். இதனைக் கண்ட ஆயர்கள் வியப்புடன் மகிழ்ந்தனர்.