Sriman Narayaneeyam - Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல் (ச்லோகம் 642)

Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல்

ததநு கிரிவரஸ்ய ப்ரோத்ருதஸ்ய அஸ்ய தாவத் ஸிகதில ம்ருது தேசே தூரதோ வாரிதாபே பரிகர பரிமிச்ராந் தேநு கோபாநதஸ்தாத் உபநிததததத்தா ஹஸ்த பத்மேந சைலம் ததநு கிரி வரஸ்ய ப்ரோத்ருதஸ்ய அஸ்ய தாவத் ஸிகதில ம்ருது தேசே தூரத: வாரித ஆபே பரிகர பரிமிச்ராந் தேநு கோபாந் அதஸ்தாத் உபநிததத் அதத்தா: ஹஸ்த பத்மேந சைலம் तदनु गिरिवरस्य प्रोद्धृतस्यास्य तावत् सिकतिलमृदुदेशे दूरतो वारितापे । परिकरपरिमिश्रान् धेनुगोपानधस्ता - दुपनिदधदधत्था हस्तपद्मेन शैलम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அந்த கோவர்த்தன மலையை உயரத்தில் தூக்கியபோது, அதன் கீழ் உள்ள தரைப்பகுதியானது மிகுந்த மணல் கொண்டு மிருதுவாக இருந்தது. அதன் கீழ் நீர் வராமல் வெகு தூரத்தில் நின்று விட்டது. அதன் கீழ் யாதவ மக்கள் அனைவரையும் அவர்கள் வீட்டுப் பொருட்களுடனும், பசுக்களுடனும் நிற்கும்படி கூறினாய். உனது சிறிய தாமரை போன்ற கைகளால் அந்த மலையை (குடை போன்று) பிடித்துக் கொண்டாய்.