Sriman Narayaneeyam - Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல் (ச்லோகம் 641)

Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல்

குல இஹ கலு கோத்ரோ தைவதம் கோத்ர சத்ரோ: விஹிதமிஹ ஸ ருந்த்யாத் கோ நு வ: ஸம்சயோSஸ்மிந் இதி ஸஹஸித வாதீ தேவ கோவர்த்தநாத்ரிம் த்வரிதமுதமுமூலோ மூலதோ பாலதோர்ப்யாம் குல இஹ கலு கோத்ர: தைவதம் கோத்ர சத்ரோ: விஹிதம் இஹ ஸ ருந்த்யாத் க: நு வ: ஸம்சய: அஸ்மிந் இதி ஸ ஹஸித வாதீ தேவ கோவர்த்தந அத்ரிம் த்வரிதம் உதமுமூல: மூலத: பால தோர்ப்யாம் कुल इह खलु गोत्रो दैवतं गोत्रशत्रो - र्विहतिमिह स रुन्ध्यात् को नु वः संशायोऽस्मिन् । इति सहसितवादी देव गोवर्धनाद्रिं त्वरितमुदमुमूलो मूलतो बालदोर्भ्याम्

தேவனே! குருவாயூரப்பா! நீ ஆயர்களிடம், “நமது யாதவ குலத்திற்கு இந்த கோவர்த்தன மலைதான் தெய்வமாகும். அது நம்மை நம்முடைய எதிரியான இந்த்ரனிடமிருந்து நிச்சயம் காப்பாற்றும். இதில் உங்களுக்கு ஏன் சந்தேகம்?”, என்று கேட்டாய். இப்படிக் கூறிக்கொண்டே உனது சிறிய அழகிய கைகளால் அந்த கோவர்த்தன மலையை அடியோடு பிடுங்கி தூக்கினாய் அல்லவா?