Sriman Narayaneeyam - Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல் (ச்லோகம் 640)
Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல்
விபுல கரக மிச்ரைஸ்தோய தாரா நிபாதை: திசி திசி பசுபாநாம் மண்டலே தண்ட்யமாநே குபித ஹரி க்ருதாந்ந: பாஹி பாஹீதி தேஷாம் வசநமஜித ச்ருண்வந் மா பிபீதேத்யபாணீ: விபுல கரக மிச்ரை: தோய தாரா நிபாதை: திசி திசி பசுபாநாம் மண்டலே தண்ட்யமாநே குபித ஹரி க்ருதாந் ந: பாஹி பாஹி இதி தேஷாம் வசநம் அஜித ச்ருண்வந் மா பிபீத இதி அபாணீ: विपुलकरकमिश्रैस्तोयधारानिपातै - र्दिशि दिशि पशुपानां मण्डले दण्ड्यमाने । कुपितहरिकृतान्नः पाहि पाहीति तेषां वचनमजित श्रुण्वन् मा बिभीतेत्यभाणीः
யாராலும் வெற்றி கொள்ள இயலாதவனே! ஸ்ரீஹரியே! குருவாயூரப்பா! அப்போது மிகப் பெரிய ஆலங்கட்டிகளுடன் வ்ருந்தாவனத்தில் மழை தாரை தாரையாகக் கொட்டியது. இதனால் அங்கு நிறைந்திருந்த ஆயர்கள் துன்பம் உற்றனர். அவர்கள் உன்னிடம், “ஸ்ரீஹரியே! கோபம் கொண்ட இந்திரனிடம் இருந்து எங்களைக் காப்பாற்று”, என்று வேண்டினர். உடனே நீ அவர்களிடம், “பயப்பட வேண்டாம்!”, என்று ஆறுதலாகக் கூறினாய்.