Sriman Narayaneeyam - Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல் (ச்லோகம் 639)
Dasaka 63 - கோவர்த்தன மலை எடுத்தல்
தத்ருசிரே கில தத் க்ஷணம் அக்ஷத ஸ்தநித ஜ்ரும்பித கம்பித திக்தடா: ஸுஷமயா பவதங்க துலாம் கதா வ்ரஜ பதோபரி வாரிதராஸ்த்வயா தத்ருசிரே கில தத் க்ஷணம் அக்ஷத ஸ்தநித ஜ்ரும்பித கம்பித திக் தடா: ஸுஷமயா பவத் அங்க துலாம் கதா வ்ரஜ பத உபரி வாரி தரா: த்வயா ददृशिरे किल तत्क्षणमक्षतस्तनितजृम्भितकम्पितदिक्तटाः । सुषमया भवदङ्गतुलां गता व्रजपदोपरि वारिधरास्त्वया
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்போது வ்ருந்தாவனத்தின் மீது மேகங்களில் இடைவிடாமல் இடி முழக்கங்கள் கேட்கத் தொடங்கின. அந்த இடியின் ஓசையைக் கேட்டு அனைத்துத் திசைகளும் நடுங்கின. உன்னுடைய அழகான திருமேனியின் நிறத்திற்கு ஒப்பான நிறம் கொண்ட மேகங்கள் பரவலாகச் சூழ்ந்தன. அவற்றைக் கண்டு நீ பெரிதும் மகிழ்ந்தாய் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-25-8 முதல் x-25-33 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.