Sriman Narayaneeyam - Dasaka 62 - இந்திர யாகம் (ச்லோகம் 637)

Dasaka 62 - இந்திர யாகம்

த்வதாவாஸம் ஹந்தும் ப்ரளய ஜலதாநம்புர புவி ப்ரஹிண்வந் விப்ராண: குலிசமயமப்ரேப கமந: ப்ரதஸ்தேSந்யைரந்தர் தஹந மருதாத்யை விஹம்ஸிதோ பவந் மாயா நைவ த்ரி புவந பதே மோஹயதி கம் த்வத் ஆவாஸம் ஹந்தும் ப்ரளய ஜலதாந் அம்புர புவி ப்ரஹிண்வந் விப்ராண: குலிசம் அயம் அப்ர இப கமந: ப்ரதஸ்தே அந்யை: அந்த: தஹந மருத ஆத்யை: விஹம்ஸித: பவந் மாயா ந ஏவ த்ரி புவந பதே மோஹயதி கம் त्वदावासं हन्तुं प्रलयजलदानम्बरभुवि प्रहिण्वन् बिभ्राणः कुलिशमयमभ्रेभगमनः । प्रतस्थेऽन्यैरन्तर्दहनमरुदाद्यैर्विहसितो भवन्माया नैव त्रिभुवनपते मोहयति कम्

மூன்று உலகிற்கும் நாயகனே க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னுடைய இருப்பிடத்தை அழிக்கும் எண்ணத்துடன், தனது வஜ்ராயுதம் எடுத்துக் கொண்டும், ஐராவதம் என்ற யானை மீது அமர்ந்தும் இந்திரன் புறப்பட்டான். ப்ரளய காலத்தில் மழையை விடாது பெய்கின்ற மேகக்கூட்டங்களை ஏவினான். இதனைக் கண்டு அக்னி, வாயு முதலான தேவதைகள் மனதிற்குள் பரிகாசம் செய்தன. இருப்பினும் அவன் தொடர்ந்தான். உன்னுடைய மாயைக்கு மயங்காதவர் உண்டோ?