Sriman Narayaneeyam - Dasaka 62 - இந்திர யாகம் (ச்லோகம் 635)
Dasaka 62 - இந்திர யாகம்
பரிப்ரீதா: யாதா: கலு பவதுபேதா வ்ரஜ ஜுஷோ வ்ரஜம் யாவத் தாவந் நிஜ மக விபங்கம் நிசமயந் பவந்தம் ஜாநந்நப்யதிக ரஜஸாSSக்ரந்த ஹ்ருதயோ ந ஸேஹே தேவேந்த்ரஸ்த்வதுபரசிதாத்மோந்நதிரபி பரிப்ரீதா யாதா: கலு பவத் உபேதா: வ்ரஜ ஜுஷ: வ்ரஜம் யாவத் தாவத் நிஜ மக விபங்கம் நிசமயந் பவந்தம் ஜாநந் அபி அதிக ரஜஸா ஆக்ரந்த ஹ்ருதய: ந ஸேஹே தேவ இந்த்ர: த்வத் உபரசித ஆத்ம உந்நதி: அபி परिप्रीताः याताः खलु भवदुपेता व्रजजुषो व्रजं यावत्तावन्निजमखविभङ्गं निशमयन् । भवन्तं जानन्नप्यधिकरजसाऽऽक्रान्तहृदयो न सेहे देवेन्द्रस्त्वदुपरचितात्मोन्नतिरपि
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக ஆயர்கள் அனைவரும் மகிழ்ந்து பின்னர் உன்னுடன் ப்ருந்தாவனத்திற்குச் சென்றனர். இதற்கிடையே தனக்கு உரிமையான வேள்வி தடைப்பட்டதை இந்திரன் அறிந்தான். உனது வலிமை என்ன என்று உணர்ந்திருந்தும். தனது இந்திர பதவி உன்னால் அளிக்கப்பட்டது என்பதை அறிந்திருந்தும், ராஜஸ குணம் மிகவும் அதிகமான மனதை உடையவனாக, மிகவும் கோபம் கொண்டான்.