Sriman Narayaneeyam - Dasaka 62 - இந்திர யாகம் (ச்லோகம் 633)
Dasaka 62 - இந்திர யாகம்
பவத் வாசம் ச்ருத்வா பஹுமதி யுதாஸ்தேSபி பசுபா: த்விஜேந்த்ராநர்ச்சந்தோ பலிமததுருச்சை: க்ஷிதிப்ருதே வ்யது: ப்ராதக்ஷிண்யம் ஸுப்ருசமநமந்நாதர யுதா: த்வமாதச்சைலாத்மா பலிமகிலமாபீர புரத: பவத் வாசம் ச்ருத்வா பஹு மதி யுதா: தே அபி பசுபா: த்விஜ இந்த்ராந் அர்ச்சந்த: பலிம் அதது: உச்சை: க்ஷிதிப்ருதே வ்யது: ப்ராதக்ஷிண்யம் ஸுப்ருசம் அநமந் ஆதர யுதா: த்வம் ஆத: சைல ஆத்மா பலிம் அகிலம் ஆபீர புரத: भवद्वाचं श्रुत्वा बहुमतियुतास्तेऽपि पशुपाः द्विजेन्द्रानर्चन्तो बलिमददुरुच्चैः क्षितिभृते । व्यधुः प्रादक्षिण्यं सुभृशमनमन्नादरयुता - स्त्वमादः शैलात्मा बलिमखिलमाभीरपुरतः
குருவாயூரப்பா! உன்னுடைய சொற்களை யாதவர்கள் மிகவும் மதித்தனர். அதனை ஒப்புக்கொண்டனர். வேள்வி இயற்றும் அந்தணர்களை வணங்கினர். கோவர்த்தன மலைக்கு பூஜைப் பொருட்களை அர்ப்பணித்தனர். மிகுந்த பக்தியுடன் அந்த மலையை வலம் வந்தனர். நீ அந்த மலையின் ஆத்மாவாக மாறி, அவர்கள் கொடுத்ததை மகிழ்ந்து ஏற்றாய் அல்லவா?