Sriman Narayaneeyam - Dasaka 62 - இந்திர யாகம் (ச்லோகம் 632)

Dasaka 62 - இந்திர யாகம்

இதம் தாவத் ஸத்யம் யத் இஹ பசவோ ந: குலதனம் ததாஜீவ்யாயாஸௌ பலிரசல பர்த்ரே ஸமுசித: ஸுரேப்யோSப்யுத்க்ருஷ்டா நநு தரணி தேவா: க்ஷிதிதலே ததஸ்தேSப்யாராத்யா இதி ஜகதித த்வம் நிஜ ஜநாந் இதம் தாவத் ஸத்யம் யத் இஹ பசவ: ந: குலதனம் தத் ஆஜீவ்யாய அஸௌ பலி: அசல பர்த்ரே ஸமுசித: ஸுரேப்ய: அபி உத்க்ருஷ்டா நநு தரணி தேவா: க்ஷிதிதலே தத: தே அபி ஆராத்யா இதி ஜகதித த்வம் நிஜ ஜநாந் इदं तावत् सत्यं यदिह पशवो नः कुलधनं तदाजीव्यायासौ बलिरचलभर्त्रे समुचितः । सुरेभ्योऽप्युत्कृष्टा ननु धरणिदेवाः क्षितितले ततस्तेऽप्याराध्या इति जगदिथ त्वं निजजनाम्

குருவாயூரப்பா! மேலும் நீ உனது தந்தையிடம், “இந்தப் பசுக்கள் நமது குலத்திற்கு செல்வம் என்பது உண்மை ஆகும். அவற்றுக்கு வேண்டிய புல் முதலியவற்றைக் கொடுத்து அவற்றின் பிழைப்பிற்குக் காரணமாக இந்த கோவர்த்தன மலையே உள்ளது. எனவே இந்த மலைக்கே வேள்வி இயற்ற வேண்டும். மேலும் இந்த உலகில் உள்ள வேதம் ஓதும் அந்தணர்கள் தேவர்களை விட உயர்ந்தவர்கள் ஆவர். ஆகவே அவர்களும் வணங்கத் தகுந்தவர்கள்”, என்றாய்.