Sriman Narayaneeyam - Dasaka 62 - இந்திர யாகம் (ச்லோகம் 631)

Dasaka 62 - இந்திர யாகம்

இதி ச்ருத்வா வாசம் பிதுரயி பவாநாஹ ஸரஸம் திகேதந்நோ ஸத்யம் மகவ ஜநிதா வ்ருஷ்டிரிதி யத் அத்ருஷ்டம் ஜீவாநாம் ஸ்ருஜதி கலு வ்ருஷ்டிம் ஸமுசிதாம் மஹாரண்யே வ்ருக்ஷா: கிமிவ பலிமிந்த்ராய தததே இதி ச்ருத்வா வாசம் பிது: அயி பவாந் ஆஹ ஸரஸம் திக் ஏதத் நோ ஸத்யம் மகவ ஜநிதா வ்ருஷ்டி: இதி யத் அத்ருஷ்டம் ஜீவாநாம் ஸ்ருஜதி கலு வ்ருஷ்டிம் ஸமுசிதாம் மஹா அரண்யே வ்ருக்ஷா: கிம் இவ பலிம் இந்த்ராய தததே इति श्रुत्वा वाचं पितुरयि भवानाह सरसं धिगेतन्नो सत्यं मघवजनिता वृष्टिरिति यत् । अदृष्टं जीवानां सृजति खलु वृष्टिं समुचितां महारण्ये वृक्षाः किमिव बलिमिन्द्राय ददते

குருவாயூரப்பா! உன்னுடைய தந்தையின் சொல்லைக் கேட்டுக் கொண்டிருந்த நீ அவரிடம், “நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது. இந்திரனால் மழை பொழிகிறது என்பது சரியல்ல. மண்ணில் உள்ள உயிர்களின் முன் ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே மழை பொழிகிறது. பெரிய காடுகளில் உள்ள மரங்கள் இந்திரனுக்கு வேள்வி நடத்தவா செய்கின்றன?”, என்று கூறினாய்.