Sriman Narayaneeyam - Dasaka 62 - இந்திர யாகம் (ச்லோகம் 630)

Dasaka 62 - இந்திர யாகம்

பபாஷே நந்தஸ்த்வாம் ஸுத நநு விதேயோ மகவதோ மகோ வர்ஷே வர்ஷே ஸுகயதி ஸ வர்ஷேண ப்ருதிவீம் ந்ருணாம் வர்ஷாயத்தம் நிகிலமுபஜீவ்யம் மஹிதலே விசேஷாதஸ்மாகம் த்ருண ஸலில ஜீவா ஹி பசவ: பபாஷே நந்த: த்வாம் ஸுத நநு விதேய: மகவத: மக: வர்ஷே வர்ஷே ஸுகயதி ஸ: வர்ஷேண ப்ருதிவீம் ந்ருணாம் வர்ஷ ஆயத்தம் நிகிலம் உபஜீவ்யம் மஹி தலே விசேஷாத் அஸ்மாகம் த்ருண ஸலில ஜீவா ஹி பசவ: बभाषे नन्दस्त्वां सुत ननु विधेयो मघवतो मखो वर्षे वर्षे सुखयति स वर्षेण पृथिवीम् । नृणां वर्षायत्तं निखिलमुपजीव्यं महितले विशेषादस्माकं तृणसलिलजीवा हि पशवः

குருவாயூரப்பா! உடனே நந்தகோபர் உன்னிடம், “க்ருஷ்ணா! இந்திரன் இந்த உலகின் ஆதாரமான மழையை அளித்து இன்பத்தைத் தருகிறான். உலகில் உள்ள அனைவரும் பிழைப்பதற்கு மழையே ஆதாரமாக உள்ளது. நமது பசுக்கள் நீராலும் புல்லாலும் மட்டுமே வாழ்கின்றன அல்லவா? இதனால் நாம் ஒவ்வொரு ஆண்டும் இந்திரனுக்கு வேள்வி இயற்ற வேண்டும்”, என்று விளக்கினார்.