Sriman Narayaneeyam - Dasaka 62 - இந்திர யாகம் (ச்லோகம் 629)

Dasaka 62 - இந்திர யாகம்

கதாசித் கோபாலாந் விஹித மக ஸம்பார விபவாந் நிரீக்ஷ்ய த்வம் சௌரே மகவ மதமுத்த்வம்ஸிது மநா: விஜாநந்நப்யேதாந் விநய ம்ருது நந்த ஆதி பசுபாந் அப்ருச்ச: கோ வாSயம் ஜநக பவதாமுத்யம இதி கதாசித் கோபாலாந் விஹித மக ஸம்பார விபவாந் நிரீக்ஷ்ய த்வம் சௌரே மகவ மதம் உத்த்வம்ஸிது மநா: விஜாநந அபி ஏதாந் விநய ம்ருது நந்த ஆதி பசுபாந் அப்ருச்ச: க: வா அயம் ஜநக பவதாம் உத்யம இதி कदाचिद्गोपालान् विहितमखसम्भारविभवान् निरीक्ष्य त्वं शौरे मघवमदमुध्वंसितुमनाः । विजानन्नप्येतान् विनयमृदु नन्दादिपशुपा - नपृच्छः को वायं जनक भवतामुद्यम इति

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒரு நாள் ப்ருந்தாவனத்தில் இருந்த அனைத்து கோபர்களும், இந்திரனைக் குறித்து நிகழ்த்தப்படும் யாகத்திற்குத் தேவையான பொருட்களை சேமித்துக் கொண்டிருந்தனர். அப்போது நீ இந்திரனுடைய கர்வத்தை அடக்க எண்ணினாய். ஆகவே எதுவும் அறியாதவன் போல் உனது தந்தையிடம் சென்று, “இந்த ஏற்பாடுகள் எதற்காக?”, என்று கேட்டாய் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x, அத்யாயம் 24ன் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.