Sriman Narayaneeyam - Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல் (ச்லோகம் 627)

Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல்

ஆதாய போஜ்யாந்யநுக்ருஹ்ய தா: புந: த்வதங்க ஸங்க ஸ்ப்ருஹயோஜ்ஜதீர் க்ருஹம் விலோக்ய யஜ்ஞாய விஸர்ஜயந்நிமா: சகர்த்த பர்த்ரூநபி தாஸ்வகர்ஹணாந் ஆதாய போஜ்யாநி அநுக்ருஹ்ய தா: புந: த்வத் அங்க ஸங்க ஸ்ப்ருஹயா உஜ்ஜதீ: க்ருஹம் விலோக்ய யஜ்ஞாய விஸர்ஜயந் இமா: சகர்த்த பர்த்ரூந் அபி தாஸு அகர்ஹணாந் आदाय भोज्यान्यनुगृह्य ताः पुनस्त्वदङ्गसङ्गस्पृहयोज्झतीर्गृहम् । विलोक्य यज्ञाय विसर्जयन्निमाश्चकर्थ भर्त्रूनपि तास्वगर्हणान्

குருவாயூரப்பா! அவர்கள் அளித்த உணவை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு அருள் செய்தாய். அவர்கள் உனது திருமேனியின் மீது விருப்பம் கொண்டனர். அதனால் தங்கள் வீடுகளைத் துறந்து வந்தனர். ஆயினும் நீ அவர்களைத் திருப்பி அனுப்பினாய். அவர்கள் கணவன்மார்கள் அந்தப் பெண்களிடம் எந்தக் குற்றமும் காணாது இருக்கும்படி அருளினாய்.