Sriman Narayaneeyam - Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல் (ச்லோகம் 626)
Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல்
ததா ச காசித் த்வதுபாகமோத்யதா க்ருஹீத ஹஸ்தா தயிதேந யஜ்வநா ததைவ ஸஞ்சிந்த்ய பவந்தமஞ்ஜஸா விவேச கைவல்யமஹோ க்ருதிந்யஸௌ ததா ச காசித் த்வதுபாகம உத்யதா க்ருஹீத ஹஸ்தா தயிதேந யஜ்வநா ததா ஏவ ஸஞ்சிந்த்ய பவந்தம் அஞ்ஜஸா விவேச கைவல்யம் அஹோ க்ருதிநீ அஸௌ तदा च काचित्त्वदुपागमोद्यता गृहीतहस्ता दयितेन यज्वना । तदैव सञ्चिन्त्य भवन्तमञ्जसा विवेश कैवल्यमहो कृतिन्यसौ
குருவாயூரப்பா! அந்த நேரத்தில் ஒரு பெண் உன்னிடம் வர முயன்றாள். அப்போது அவள் கணவன் (ஒரு ப்ராமணன்) அவள் கையைப் பிடித்துத் தடுத்தான். உடனே அவள் உன்னைக் குறித்துத் த்யானித்தாள். அந்த நொடியில் அவள் உன்னிடம் கலந்து விட்டாள் (மோக்ஷம் பெற்றாள்) அல்லவா? என்னே புண்ணியம் செய்தவள்?