Sriman Narayaneeyam - Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல் (ச்லோகம் 625)

Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல்

விலோல பிஞ்சம் சிகுரே கபோலயோ: ஸமுல்லஸத் குண்டலமார்த்ரமீக்ஷிதே நிதாய பாஹும் ஸுஹ்ருதம்ஸ ஸீமநி ஸ்திதம் பவந்தம் ஸமலோகயந்த தா: விலோல பிஞ்சம் சிகுரே கபோலயோ: ஸமுல்லஸத் குண்டலம் ஆர்த்ரம் ஈக்ஷிதே நிதாய பாஹும் ஸுஹ்ருத் அம்ஸ ஸீமநி ஸ்திதம் பவந்தம் ஸமலோகயந்த தா: विलोलपिञ्छं चिकुरे कपोलयोः समुल्लसत्कुण्डलमार्द्रमीक्षिते । निधाय बाहुं सुहृदंससीमनि स्थितं भवन्तं समलोकयन्त ताः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னை அவர்கள் எப்படி பார்த்தனர்? தலையில் அழகான கொண்டையில் மயில் பீலி அசைந்து ஆடியது; இரண்டு காதுகளில் அணிந்திருந்த குண்டலங்கள் கன்னத்தில் இடித்து ஒளி வீசியது; உனது பார்வை மிகவும் கனிவாக இருந்தது; உனது ஒரு கையை உன் நண்பனின் தோள் மீது வைத்திருந்தாய். இப்படியாக மிகுந்த அழகுடன் உன்னைக் கண்டனர் அல்லவா?