Sriman Narayaneeyam - Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல் (ச்லோகம் 624)

Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல்

க்ருஹீத நாம்நி த்வயி ஸம்ப்ரமாகுலா: சதுர்விதம் போஜ்ய ரஸம் ப்ரக்ருஹ்ய தா: சிரம் த்ருத த்வத் ப்ரவிலோகநாக்ரஹா: ஸ்வகைர் நிருத்தா அபி தூர்ணமாயயு: க்ருஹீத நாம்நி த்வயி ஸம்ப்ரம் ஆகுலா: சதுர்விதம் போஜ்ய ரஸம் ப்ரக்ருஹ்ய தா: சிரம் த்ருத த்வத் ப்ரவிலோகந ஆக்ரஹா: ஸ்வகை: நிருத்தா அபி தூர்ணம் ஆயயு: गृहीतनाम्नि त्वयि सम्भ्रमाकुलाश्चतुर्विधं भोज्यरसं प्रगृह्य ताः । चिरं धृतत्वत्प्रविलोकनाग्रहाः स्वकैर्निरुद्धा अपि तूर्णमाययुः

குருவாயூரப்பா! உன்னைக் காண்பதற்காக வெகு நாட்களாக அவர்களது மனைவிகள் எண்ணம் கொண்டிருந்தனர். இப்போது உனது பெயரையும் நீ வந்துள்ளதாக அறிந்ததையும் கேள்விப்பட்ட அவர்கள் மகிழ்ந்து பரபரப்பு அடைந்தனர். தங்கள் கணவன்மார்கள் தடுத்தபோதிலும், நான்கு வகையான உணவுகளை எடுத்துக் கொண்டு, உன்னிடம் விரைவாக வந்தனர் (நான்கு வகை உணவு: காத்யம் - கடித்து உண்பது: ஸோஷ்யம் - நாக்கில் உண்பது: லேஹியம் - வெண்ணெய் போன்றது; பேயம்- குடிப்பது).