Sriman Narayaneeyam - Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல் (ச்லோகம் 623)
Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல்
நிவேதயத்வம் க்ருஹிணீ ஜநாய மாம் திசேயுரந்நம் கருணாகுலா இமா: இதி ஸ்மிதார்த்ரம் பவதேரிதா கதா: தே தாரகா: தாரஜநம் யயாசிரே நிவேதயத்வம் க்ருஹிணீ ஜநாய மாம் திசேயு: அந்நம் கருணாகுலா இமா: இதி ஸ்மித ஆர்த்ரம் பவதா ஈரிதா கதா: தே தாரகா: தார ஜநம் யயாசிரே निवेदयध्वं गृहिणीजनाय मां दिशेयुरन्नं करुणाकुला इमाः । इति स्मितार्द्रं भवतेरिता गतास्ते दारका दारजनं ययाचिरे
குருவாயூரப்பா! அந்தச் சிறுவர்களிடம், “நீங்கள் அனைவரும் அந்தப் ப்ராமணர்களின் மனைவிகளிடம் சென்று, நான் வந்துள்ளதையும், நான் உணவு கேட்டதாகவும் கூறுங்கள். அவர்கள் கருணை உள்ளவர்கள் ஆவர். எனவே கண்டிப்பாக உணவு தருவார்கள்”, என்று புன்னகையுடன் கூறினாய். அவர்களும் ப்ராமணர்களுடைய மனைவிகளிடம் சென்று யாசித்தனர்.