Sriman Narayaneeyam - Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல் (ச்லோகம் 622)

Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல்

அநாதராத் கிந்நதியோ ஹி பாலகா: ஸமாயயுர் யுக்தமிதம் ஹி யஜ்வஸு சிராதபக்தா: கலு தே மஹீஸுரா: கதம் ஹி பக்தம் த்வயி தை: ஸமர்ப்யதே அநாதராத் கிந்நதிய: ஹி பாலகா: ஸமாயயு: யுக்தம் இதம் ஹி யஜ்வஸு சிராத் அபக்தா: கலு தே மஹீஸுரா: கதம் ஹி பக்தம் த்வயி தை: ஸமர்ப்யதே अनादरात् खिन्नधियो हि बालकाः समाययुर्युक्तमिदं हि यज्वसु । चिरादभक्ताः खलु ते महीसुराः कथं हि भक्तं त्वयि तैः समर्प्यते

குருவாயூரப்பா! தங்களை அந்தப் ப்ராமணர்கள் கவனியாமல் இருந்ததால் ஆயர் சிறுவர்கள் மிகவும் வருந்தியபடி உன்னிடம் வந்தனர். யாகத்தை மட்டுமே செய்பவர்கள் இது போன்று செய்வது இயல்பே ஆகும். அந்தப் ப்ராமணர்கள் வெகு காலம் உன்னிடம் பக்தி என்பதே இல்லாமல் இருந்தனர். அப்படிப்பட்டவர்களிடம் உணவை எதிர்பார்ப்பது எவ்வாறு பொருந்தும்?