Sriman Narayaneeyam - Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல் (ச்லோகம் 621)
Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல்
கதேஷ்வதோ தேஷ்வபிதாய தேSபிதாம் குமாரதேஷ்வோதந யாசிஷு ப்ரபோ ச்ருதி ஸ்திரா அப்யபிநிந்யுரச்ருதிம் ந கிஞ்சிதூசுச்ச மஹீஸுரோத்தமா: கதேஷு அத: தேஷு அபிதாய தே அபிதாம் குமாரதேஷு ஓதந யாசிஷு ப்ரபோ ச்ருதி ஸ்திரா அபி அபிநிந்யு: அச்ருதிம் ந கிஞ்சித் ஊசு: ச மஹீஸுர உத்தமா: गतेष्वथो तेष्वभिधाय तेऽभिधां कुमारकेष्वोदनयाचिषु प्रभो । श्रुतिस्थिरा अप्यभिनिन्द्युरश्रुतिं न किञ्चिदूचुश्च महीसुरोत्तमाः
ப்ரபுவே! குருவாயூரப்பா! அந்தச் சிறுவர்கள் அந்தப் ப்ராமணர்களிடம் சென்று உன்னுடைய பெயர்களைக் கூறிக்கொண்டே உணவு யாசித்தனர். அப்போது வேத ஞானம் உள்ள ப்ராமணர்கள், அந்தச் சிறுவர்கள் அழைப்பது தங்கள் காதுகளில் விழுந்தும் கூட, ஏதும் கேட்காதது போல் எதுவும் கூறாமல் இருந்தனர்.