Sriman Narayaneeyam - Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல் (ச்லோகம் 620)

Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல்

ததோ நிரீக்ஷ்யாசரணே வநாந்தரே கிசோர லோகம் க்ஷுதிதம் த்ருஷாகுலம் அதூரதோ யக்ஞ பராந் த்விஜாந் ப்ரதி வ்யஸர்ஜய: தீதிவி யாசநாய தாந் தத: நிரீக்ஷ்ய அசரணே வந அந்தரே கிசோர லோகம் க்ஷுதிதம் த்ருஷா ஆகுலம் அதூரத: யக்ஞ பராந் த்விஜாந் ப்ரதி வ்யஸர்ஜய: தீதிவி யாசநாய தாந் ततो निरीक्ष्याशरणे वनान्तरे किशोरलोकं क्षुधितं तृषाकुलम् । अदूरतो यज्ञपरान् द्विजान् प्रति व्यसर्जयो दीदिवियाचनाय तान्

குருவாயூரப்பா! அந்தக் காட்டின் நடுவில் ஆயர் சிறுவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் பசியாலும் தாகம் கொண்டும் வாடினார்கள். அப்போது அங்கு யாகம் செய்து கொண்டிருந்த ப்ராமணர்களிடம் சென்று உணவு யாசிக்க நீ ஆயர் சிறுவர்களை அனுப்பினாய்.