Sriman Narayaneeyam - Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல் (ச்லோகம் 619)

Dasaka 61 - ப்ராமணர்கள் மனைவிமாருக்கு அருளுதல்

ததச்ச வ்ருந்தாவநதோSதிதூரதோ வநம் கதஸ்த்வம் கலு கோபகோகுலை: ஹ்ருதந்தரே பக்ததர த்விஜாங்கநா கதம்பகாநுக்ரஹணாக்ரஹம் வஹந் தத: ச வ்ருந்தாவநத: அதிதூரத: வநம் கத: த்வம் கலு கோப கோகுலை: ஹ்ருத் அந்தரே பக்ததர த்விஜ அங்கநா கதம்பக அநுக்ரஹண ஆக்ரஹம் வஹந் ततश्च वृन्दावनतोऽतिदूरतो वनं गतस्त्वं खलु गोपगोकुलैः । हृदन्तरे भक्ततरद्विजाङ्गनाकदम्बकानुग्रहणाग्रहं वहन्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒரு சமயம் நீ உன்னிடம் மிகுதியான பக்தியும் அன்பும் கொண்டிருந்த ப்ராமணர்களின் மனைவிகளுக்கு அருள் புரிய வேண்டும் என்று விரும்பினாய். உடனே நீ ஆயர் சிறுவர்களுடனும், பசுக் கூட்டத்துடனும் உனது இருப்பிடமான ப்ருந்தாவனத்தை விட்டுக் கிளம்பி, வெகு தூரத்தில் இருந்த ஒரு காட்டிற்குச் சென்றாய் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x, அத்யாயம் 23ன் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.