Sriman Narayaneeyam - Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல் (ச்லோகம் 617)
Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல்
உபகர்ண்ய பவந்முகச்யுதம் மது நிஷ்யந்தி வசோ ம்ருகீ த்ருச: ப்ரணயாதபி வீக்ஷ்ய வீக்ஷ்ய தே வதநாப்ஜம் சநகைர் க்ருஹம் கதா: உபகர்ண்ய பவத் முக ச்யுதம் மது நிஷ்யந்தி வச: ம்ருகீ த்ருச: ப்ரணயாத் அபி வீக்ஷ்ய வீக்ஷ்ய தே வதந் அப்ஜம் சநகை: க்ருஹம் கதா: उपकर्ण्य भवन्मुखच्युतं मधुनिष्यन्दि वचो मृगीदृशः । प्रणयादयि वीक्ष्य वीक्ष्य ते वदनाब्जं शनकैर्गृहं गताः
குருவாயூரப்பா! மான் போன்ற அழகான கண்களை உடைய அந்த கோபிகைகள், உனது இனிமையான சொற்களை கேட்டு மிகவும் மகிழ்ந்தனர். உனது அழகிய தாமரை போன்ற மலர்ந்த முகத்தை மீண்டும் மீண்டும் பார்த்தனர். அப்படியே பார்த்தபடி வீடுகளுக்குச் சென்றனர்.