Sriman Narayaneeyam - Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல் (ச்லோகம் 616)
Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல்
விதிதம் நநு வோ மநீஷிதம் வதிதாரஸ்த்விஹ யோக்யமுத்தரம் யமுநா புலிநே ஸசந்த்ரிகா: க்ஷணதா இத்யபலாஸ்த்வமூசிவாந் விதிதம் நநு வ: மநீஷிதம் வதிதார: து இஹ யோக்யம் உத்தரம் யமுநா புலிநே ஸசந்த்ரிகா: க்ஷணதா இதி அபலா: த்வம் ஊசிவாந் विदितं ननु वो मनीषितं वदितारस्त्विह योग्यमुत्तरम् । यमुनापुलिने सचन्द्रिकाः क्षणदा इत्यबलास्त्वमूचिवान्
குருவாயூரப்பா! நீ அவர்களிடம், “கோபிகைகளே! உங்கள் மனதில் உள்ள எண்ணம் முழுவதும் நான் அறிந்து கொண்டேன். அந்த எண்ணங்களுக்கான பதிலை உங்களுக்கு இன்னும் சிறிது காலம் கழித்து, யமுனை ஆற்றின் கரையில் உள்ள மணலில், நிலவுடன் இணைந்த ஓர் இரவு கூறும்”, என்றாய்.